டி20 கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (23:01 IST)
உலக கோப்பை டி20 தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.
 
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
அந்த அணி 4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது என்பதும் தொடக்க ஆட்டக்காரர் மிட்செல் 11 ரன்களில் அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் வந்த  கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடியாக ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்தார். 32 ரன்களில் 50 ரன்களை கடந்தார் அவர். மறுமுனையில் பிலிப்ஸ் நிதானமாகவே  ஆடினார். வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில் ஹாசில்வுட் ஓவரில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில்   நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.  
 
இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி. இதன் மூலம் முதன்முறையாக டி20 உலக் கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்