டி 20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:33 IST)
அக்டோபர் மாதம் தொடங்க உள்ள டி 20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டே நடக்க வேண்டிய டி 20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டொபர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க உள்ளது. இதற்காக பல அணிகளும் தயாராகி தங்கள் அணியை அறிவித்துள்ளன.  அந்த வகையில் இப்போது ஆஸி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை ஆரோன் பின்ச் தலைமை தாங்க உள்ளார்.

ஆஸி அணி விவரம்:-

ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), பாட் கமின்ஸ் (துணைக் கேப்டன்), ஆஷ்டன் ஆகர், ஜோஷ் ஹாசில்வுட், ஜோஷ் இங்லிஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மிட்செல் ஸ்வெப்சன், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்ப்பா

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்