‘ஆசியக் கோப்பை தொடர் இலங்கையில் நடக்காது…’ பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (09:05 IST)
இலங்கையில் நடக்க இருந்த ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கான ஆசியக் கோப்பை தொடர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் இந்தியா அதிகளவிலான கோப்பைகளை வென்ற நாடாக உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை இலங்கையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார சூழல் காரணமாக தற்போது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை இப்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதி செய்துள்ளார். மேலும் அமீரகத்தில் மட்டும்தான் ‘மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்’ சொல்லப்படுகிறது.

ஆசியக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 7 வரை டி 20 தொடராக நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்