ஆசியக் கோப்பை போட்டிகள் வேறு நாட்டுக்கு மாற்றப்படுகிறதா? லேட்டஸ்ட் தகவல்!

திங்கள், 18 ஜூலை 2022 (09:47 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் ஆகஸ் மாத இறுதியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கான ஆசியக் கோப்பை தொடர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் இந்தியா அதிகளவிலான கோப்பைகளை வென்ற நாடாக உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை இலங்கையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார சூழல் காரணமாக தற்போது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்