ஆசிய கோப்பை : இந்தியா -பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் இந்த நாட்டில் நடக்கிறதா?

Webdunia
வெள்ளி, 24 மார்ச் 2023 (17:28 IST)
16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் பொதுவான  இடத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் நிலையில்,  16 வது கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானின் நடக்கிறது. இதில், இந்தியா பங்கேற்காது என்று இந்திய கிரிக்கெட் போர்ட்  அறிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்ட் கூறியுள்ளது.

இந்தியாவில் போட்டிகள் நடப்பதற்குப் பதில், ஓமன், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் போட்டிகள்  நடத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 40 டிகிரி பாரன்ஹீட் இருக்கும் என்பதால், இலங்கைகள் நடத்த வாய்ப்புள்ளது.

அதேபோல், பாகிஸ்தான் – இந்தியா இடையேயான போட்டியை  இங்கிலாந்தில் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் பொதுவான  இடத்தில் நடத்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ள  நிலையில், சில மாதங்களில் இப்போட்டிகள் குறித்த அட்டவணைகள் வெளியாகவுள்ளது.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்