ஆசிய கோப்பை : இலங்கைக்கு 122 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:17 IST)
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு 122 ரன் கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்றைய ஆட்டத்தில்  ஷனாகா தலைமையிலான இலங்கை அணி டாஸ்வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. பாபர் தலைமையிலான பாகிஸ்தான் தற்போது பேட்டிங் செய்தது.

இதில் ரிஷான் 14 ரன்களும், அசாம் 30 ரன்களும் நவாஸ் 26 ரன்களும் டடித்தனர்,  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். எனவே  19.1 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து இலங்கைக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது இலங்கை அணி 11 ஓவர்களில் 73 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து ஆடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்