2 விக்கெட்களைத் தட்டித் தூக்கிய அஸ்வின்… நியுசிலாந்து நிதான ஆட்டம்!

vinoth
வியாழன், 24 அக்டோபர் 2024 (12:27 IST)
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளது. இந்திய அணியில் அதிரடி மாற்றமாக கே எல் ராகுல், சிராஜ் மற்றும் குல்தீப் ஆகியோர் நீக்கப்பட்டு, ஷுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர்  மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நியுசிலாந்து அணி பேட் செய்து வரும் நிலையில் நிதானமாக விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடி வருகின்றனர். தற்போது அந்த அணி 2 விக்கெட்களை இழந்து 107 ரன்கள் சேர்த்து ஆடிவருகிறது. களத்தில் தொடக்க வீரர் டெவோன் கான்வே 60 ரன்களுடனும், ரச்சின் ரவீந்தரா 13 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

புனே ஆடுகளம் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியுசிலாந்தின் இரண்டு விக்கெட்களையும் அஸ்வின் வீழ்த்தியுள்ளார். பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர்கள் குறைவான ஓவர்களே பந்துவீசியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்