அந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவெடுத்தது தவறான முடிவு என கேப்டன் ரோஹித் ஷர்மா கூறியுள்ளார். இது சம்மந்தமாக “டாஸ் வென்றதும் ஆடுகளம் பேட் செய்ய ஏதுவாக ப்ளாட்டாக இருக்கும் என நினைத்து முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்துவிட்டேன். நான் ஆடுகளத்தைத் தவறாக கணித்துவிட்டேன். அது என்னுடைய தவறுதான்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது போட்டி புனேவில் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து பேசியுள்ள பயிற்சியாளர் கம்பீர் “உலகில் உள்ள யாருமே பிட்ச் குறித்து துல்லியமாகக் கணிக்க முடியாது. புனே மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இரு அணிகளும் இறங்கி ஆடும்போதுதான் உண்மை தெரியும். அதுவரை எதுவும் உறுதியாக சொல்ல முடியாது. அதனால் இன்னும் நாங்கள் பிளேயிங் லெவன் அணி முடிவாகவில்லை.” எனக் கூறியுள்ளார்.