சேவாக் மட்டும் அப்படி சொல்லியிருந்தால் அடித்திருப்பேன் – அக்தர் ஆவேசம்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (10:50 IST)
சேவாக் மற்றும் அக்தருக்கு இடையிலான ஒரு சூடான விவாதம் பற்றி வெளியான கருத்து இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கிடையே மைதானத்தில் எழும் மோதல்கள் அப்போது மட்டும் இல்லாமல் காலம் கடந்தும் பரபரப்பை ஏற்படுத்தக் கூடியவை. வெங்கடேச பிரசாத்- மியாண்டட், கம்பீர் – அப்ரிடி ஆகியவர்களுக்கு இடையில் நடந்த மோதல்கள் இன்றும் இணையத்தில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் சேவாக் தனக்கும் அக்தருக்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பற்றி ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொண்டார். அதில் ‘அக்தர் எனக்கு பவுன்ஸர்களை வீசிக்கொண்டே ஹூக் ஷாட் அடி எனக் கூறிவந்தார். நான் அதற்கு எதிரில் இருக்கும் சச்சினுக்கு வீசுங்கள். அவர் ஹூக் ஷாட் ஆடி சிக்ஸ் அடிப்பார். அப்போது தெரியும் அப்பா அப்பாதான்.. பிள்ளை பிள்ளைதான் என்று கூறினேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அக்தர் தங்கள் இருவருக்கும் இடையில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் அப்படி மட்டும் சேவாக் சொல்லியிருந்தால் அவரை நான் மைதானத்திலும் கேலரியிலும் அடித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார். அக்தரின் இந்த கருத்தானது கிரிக்கெட் உலகில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்