500 விக்கெட்கள் என்பது விளையாட்டல்ல – பிராடை புகழ்ந்த யுவ்ராஜ் சிங்!

புதன், 29 ஜூலை 2020 (16:28 IST)
இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளது குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

ஸ்டூவர்ட் பிராட் என்ற பெயரை கேட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் யுவ்ராஜ் சிங் அவரது ஓவரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்ததுதான். ஒரு வேகப்பந்து வீச்சாளராக ஸ்டூவர்ட் பிராடின் கிரிக்கெட் வாழ்க்கையில் அது மிகப்பெரிய சறுக்கலாகும். ஆனால் அதிலிருந்து மனம் தளராமல் மீண்டும் தன்னுடைய திறமையை வளர்த்துக்கொண்டு  டெஸ்ட் அரங்கில் இதுவரை 7 பந்துவீச்சாளர்கள் மட்டுமே சாதித்த சாதனைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

நேற்று தனது டெஸ்ட் கேரியலில் 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தை சாதனை படைத்துள்ள அவருக்கு யுவ்ராஜ் சிங் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதில் ‘நான் எப்போது ஸ்டூவர்ட் பிராடைப் பற்றி எழுதினாலும் மக்கள் அதை 2007 ஆம் ஆண்டு போட்டியின் 6 சிக்ஸர்களோடு தொடர்பு படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் நான் இன்று அவர்கள் அனைவரையும் அதை மறந்து அவரைப் பாராட்டுமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

500 டெஸ்ட் விக்கெட்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்காக நீங்கள் கடுமையாக உழைக்கவேண்டும் ; அர்ப்பணிப்பு அளிக்க வேண்டும்; பிராட் எனது அருமை நண்பனே நீ ஒரு சாதனையாளன். உன்னை தலைவணங்குகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்