வெஸ்ட் இண்டீஸை திணறடித்த ஆஃப்கன் வீரர்கள்!!

Arun Prasath
திங்கள், 18 நவம்பர் 2019 (09:08 IST)
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3 ஆவது டி20 போட்டியில் அசுரத்தனமாக விளையாடி ஆஃப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேன ஒரு நாள் போட்டி தொடர், டி20, டெஸ்ட் போட்டிகள் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ஏகனா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டி20 போட்டியின் 3 ஆவது போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், முதலில் களமிறங்கிய ஆஃப்கன் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே குவித்து தோல்வியை சந்தித்தன.

முன்னதாக முதல் டி20 போட்டியில் ஆஃப்கன் அணி தோல்வியை தழுவியது. பின்னர் இரண்டாவதில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் டி20 தொடரை ஆஃப்கானிஸ்தான் கைப்பற்றியுள்ளது.

தொடரின் ஆட்ட நாயகன் விருதை ஆஃப்கன் வீரர் கரீம் ஜனாத்தும், போட்டியின் ஆட்டநாயகன் விருதை ரஹமனுல்லா குர்பாஸும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்