அதிசயங்கள் சில நேரம் நடக்கலாம்… நடிப்பின் நாயகன் குல்ப்தின் தனது மருத்துவருடன் பகிர்ந்த புகைப்படம்!

vinoth
வியாழன், 27 ஜூன் 2024 (07:00 IST)
ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடந்த கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் ஆப்கன் அணியின் வீரர் குல்புதீன் தான் செய்த ஒரு செயலால் கிரிக்கெட் உலகில் கடந்த சில தினங்களாக அதிகம் சர்ச்சிக்கப்பட்ட நபராக ஆகியுள்ளார்.

இந்த போட்டியின் இறுதிகட்டத்தில் இரு அணிகளும் சம வெற்றி வாய்ப்பைப் பெற்றிருந்தனர். அப்போது மழை வருவது போல இருந்தது. மழை வந்து போட்டி தடைபட்டால் அது ஆப்கானிஸ்தான் அணிக்கு சாதகம் என்பதால் அந்த அணியின் பயிற்சியாளர் ஜானதான் ட்ராட் மெதுவாக விளையாடுங்கள் என்று பெவிலியனில் இருந்து சிக்னல் கொடுத்தார்.

அதைப் பார்த்த ஆப்கான் வீரர் குல்புதீன் ஸ்லிப்பில் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது திடீரென தசை பிடிப்பு ஏற்பட்டு வலிப்பது போல கீழே விழுந்து நடிக்க ஆரம்பித்தார். உடனே அவருக்கு பிசியோதெரபிஸ்ட் வந்து மருத்துவ சிகிச்சை அளித்தார். உடனே அவர் சரியாகி பீல்டிங் செய்தார். அதன் பின்னர் போட்டி முடிந்த போது வெற்றி உற்சாகத்தில் மின்னல் வேகத்தில் ஓடி கொண்டாடினார். இதன் மூலம் அவர் வேண்டுமென்ற தசைப்பிடிப்பு வந்தது போல நடித்தது ஊர்ஜிதமானது.

ரசிகர்கள் இல்லாமல் வர்ணனையாளரான இயான் ஸ்மித் கூட “எனக்கு மூட்டு வலி உள்ளது. நான் குல்புதீனின் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். அவர்தான் உலகின் எட்டாவது அதிசயம்” என கேலி செய்திருந்தார். இந்நிலையில் குல்ப்தீன் தற்போது தன்னுடைய பிசியோதெரபிஸ்ட்டோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளர். அதில் “சில நேரங்களில் அற்புதங்கள் நடக்கலாம். இவர்தான் என்னுடைய பிஸியோதெரபிஸ்ட் பிரசாந்த் பஞ்சாடா” எனக் கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்