ஆஸி அணியின் கேப்டன் பின்ச் பாதியிலேயே வெளியேறியதால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 1 நவம்பர் 2022 (10:40 IST)
ஆஸ்திரேலியா அணியின் லிமிடெட் ஓவர் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சில மாதங்களுக்கு முன்னர்ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் டி 20 உலகக்கொப்பை தொடர்தான் அவரின் கடைசி சர்வதேச தொடர். இந்நிலையில் நேற்று அவர் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஆனால் போட்டியில் அவர் பீல்ட் செய்த போது அவர் காயமடைந்ததை அடுத்து பாதியிலேயே களத்தை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் மேத்யு வேட் கேப்டனாக செயல்பட்டார். இதனால் அடுத்த போட்டியில் பின்ச் களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
edited by vinoth

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்