உங்கள் கேப்டன்சியில் நான் சரியாக விளையாடவில்லை… அலெஸ்டர் குக்கிடம் ஓபனாக சொன்ன மொயின் அலி!

Webdunia
வெள்ளி, 7 ஜனவரி 2022 (15:39 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான குக் மற்றும் மொயின் அலி கலந்துகொண்ட டிவி விவாத நிகழ்ச்சி கவனத்தை ஈர்த்துள்ளது.

கிரிக்கெட் சம்மந்தமான டி வி விவாத நிகழ்ச்சி ஒன்றில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக்கும் மொயின் அலியும் கலந்துகொண்டனர். அப்போது குக் இருக்கும்போதே மொயின் அலி ‘நான் சிறப்பாக செயல்பட்டது ஜோ ரூட் கேப்டன்சியில்தான்’ எனக் கூறினார்.

இதைக் கேட்ட குக் ‘அப்போது நான் சிறந்த கேப்டன் இல்லையா? என் கேப்டன்சியை விமர்சிக்கிறாயா?’ என அலியை சீண்டும் விதமாகக் கேட்டார். அதற்கு பதிலளித்த மொயின் அலி ‘ஆம் கொஞ்சம் விமர்சிக்கிறேன். நான் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது குக் கேப்டன்சியில்தான். ஆனால் ஒரு பவுலராக நான் சிறப்பாக செயல்பட்டது ஜோ ரூட்டால்தான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்