பெண்கள் கர்ப்பக்காலத்தில் சாப்பிட ஏற்ற காய்கறிகள் என்ன...?

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (11:44 IST)
தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தக்காளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது.


கத்தரிக்காயும் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிடுவது நல்லது. கத்திரிக்காய் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது, ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, போலேட் மற்றும் நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது பிறப்பு குறைபாடுகளை தடுக்கக்கூடியது.

உருளைக்கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம், இரும்பு, வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும் அதில் இருக்கிறது.

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை பயக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினைகளான மலச்சிக்கல் மற்றும் மூல நோய் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்