உங்க மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கனு கேட்க வேண்டியது தானே? சொன்னது யார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 2 டிசம்பர் 2016 (18:27 IST)
திருமணமான நடிகைகளிடம் இன்னும் குழந்தை பெறவில்லை என்று கேட்பவர்கள், திருமணமான நடிகர்களிடம் உங்கள் மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கனு கேட்க வேண்டியது தானே என்று பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.


 

 
பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் திருமணமான நடிகைகளிடம் குழந்தை குறித்து கேட்கும் கேள்விக்கும் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
பேட்டிகளின் போது என் திருமண வாழ்க்கை மற்றும் நான் எப்போது குழந்தை பெறப் போகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். திருமணமான நடிகர்களும் உள்ளனர். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்போ கர்ப்பமாக்குவீங்கனு யாரும் கேட்பது இல்லை.
 
திருமணமான பெண் என்பதையும் தாண்டி எனக்கென்று ஒரு அடையாளம் உள்ளது. என் வாழ்வில் நான்தான் முக்கியமான நபர் என்று கூறினால் மக்கள் ஒரு மாதிரி பார்க்கிறார்கள். திருமணமானதால் சித்தார்த் தான் முன்னியம் என்று கூற வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
 
சித்தார்த்தை நான் மிகவும் நேசிக்கிறேன், ஆனாலும் என் வாழ்வில் நான்தான் முக்கியமான நபர். இப்படி செல்வதால் நான் சுயநலவாதி என யார் நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை, என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்