தற்போது வெளியாகும் படங்களின் பாடல்கள் யூடியூபில் வெளியிடப்படும் வீடியோக்களை எத்தனை பேர் பார்த்தார்கள் என்பதை வைத்துத்தான் அந்தப் படத்தின் வெற்றி எவ்வாறு இருக்கும் என தீர்மானிக்கிறார்கள்.
வெளியான டிரெய்லரை பல லட்சம் பேர் பார்த்தாலும் கூட படம் தியேட்டருக்கு வந்தபின் மக்கள் கூட்டம் வருவதில்லை. இதை வைத்து ஒரு படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இவ்வாறிருக்க இயக்குனர் பாலுமகேந்திராவின் உதவியார் ஸ்ரீகண்டன் ‘தப்பு தண்டா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள். ஹீரோ சத்யா, ஹீரோயினி சுவேதா கய். இந்தப் படத்துக்கு புது இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசை அமைத்திருக்கிறார். இவர் இசையில் கானா வினோத் பாடிய ‘டூப்ளிக்கா டோமாரி’ என்று துவங்கும் பாடல் யூடியூபில் வெளியானது. இந்தப் பாடலை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.