நான் திருமணம் செய்யாமல் இருக்க இவர்தான் காரணம்; உருகிய தபு

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2017 (15:20 IST)
பிரபல பாலிவுட் நடிகை தபு திருமணம் செய்யமால் இருக்க நடிகர் ஒருவர்தான் காரணம் என கூறியுள்ளார்.


 

 
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மற்றும் காதல் தேசம் படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை தபு. இவருக்கு தற்போது வயது 45. இவர் இதுவரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. இவர் திருமணம் செய்யாமல் இருக்க பிரபல நடிகர் அஜய் தேவான்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
அவர் என் மிக நெருங்கிய உறவினரின் நண்பர். என் வாழ்வில் ஆரம்பத்தில் இருந்தே அவர் என்னுடன் ஒன்றாக இருந்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியே செல்வோம். என் உணர்வுகள் அவருக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.
 
அஜய் தேவ்கான் பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் கணவர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்