கோவாவில் ஸ்ருதி ஹாசன் படத்தின் ஷூட்டிங்

Webdunia
சனி, 2 ஜூன் 2018 (14:51 IST)
ஸ்ருதிஹாசன் நடிக்கும் பாலிவுட் படத்தின் ஷூட்டிங், கோவாவில் நடைபெற இருக்கிறது.
கையில் பட வாய்ப்புகளே இல்லாமல் ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டிருந்தார் ஸ்ருதிஹாசன். கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே அவர் கையில் இருந்தது. ‘விஸ்வரூபம் 2’, ‘பிக் பாஸ் 2’, ‘இந்தியன் 2’ ஆகியவற்றில் பிஸியாக இருக்கும் கமல், அரசியலிலும் பிஸிதான். எனவே, இப்போதைக்கு ‘சபாஷ் நாயுடு’ தொடங்கும் என்று சொல்ல முடியாது.
 
இந்நிலையில், பாலிவுட் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார் ஸ்ருதி. மகேஷ் மஞ்ரேகர் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஸ்ருதி ஜோடியாக வித்யுத் ஜம்வால் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்ற நிலையில், விரைவில் இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு கோவாவில் தொடங்க இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்