என் மகளுக்கு நடிக்கும் பிழைப்பு எதற்கு? புலம்பும் பாலிவுட் நடிகர்

Webdunia
திங்கள், 19 ஜூன் 2017 (16:08 IST)
தனது மகள் நடிகையானது பிடிக்கவில்லை என பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் கூறியுள்ளர்.


 

 
பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் பிரபல பாலிவுட் நடிகை நடிகை கரீனா கபூரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் அண்மையில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் மனைவிக்கு பிறந்த மகள் சாரா தற்போது ரஜ்புட் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகிறார். 
 
தனது மகள் நடிகையானது பிடிக்கவில்லை என புலம்பும் சயீப் அலிகான் கூறியதாவது:-
 
சாரா படித்த படிப்புக்கு அமெரிக்காவில் தங்கி வேலை பார்க்கலாம். அதை விட்டு நடிக்கும் பிழைப்பு எதற்கு? அதற்காக நடிப்பு துறையை குறை சொல்லவில்லை. நடிப்பு நிலையான தொழில் அல்ல. நன்றாக நடித்தாலும் வெற்றிப் பெற முடியும் என உறுதியாக கூற முடியாது, என்றார்.
 
அடுத்த கட்டுரையில்