"நாட்டாமையின் கையில் நாடே கெட்டுப்போச்சு" மஸான என்ஜிகே பாடல்!

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (18:44 IST)
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள என்ஜிகே படத்தின் "தண்டால்காரன்" பாடல் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் என்ஜிகே. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங்  ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல்வாதியாக சூர்யா நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.  
 
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டிவருகின்றனர். இப்படம் திட்டமிட்டபடி மே 31 ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான  "தண்டல்காரன் பாக்குறான், தண்டசோறு கேக்குறான், பொடி வச்சு பேசுறான், கண்டபடி ஏசுறான்..." என துவங்கும் இந்தப்பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சூர்யாவின் கதாபாத்திரத்தை விளக்கும் விதத்தில் அமைந்த இப்பாடல்,  சமூகத்தில் நிலவும் அவலம் மற்றும் அரசியல் அராஜகங்ககளை வெளிப்படுத்தும் விதத்திலும் அமைந்துள்ளது. கபிலன் வைரமுத்து வரியில் கே.ஜி.ரஞ்சித் பாடலை பாட யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசியலயைமையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்