ஜப்பான் நில நடுக்கத்தில் இருவர் உயிரிழப்பு - 90 பேர் காயம்

Webdunia
வியாழன், 17 மார்ச் 2022 (09:39 IST)
ஜப்பானின் வட கிழக்கு பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 2 பேர் உயிரிழந்துள்ளனர். 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் சுமார் 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் மக்களால் நிற்கவே முடியாத நிலை இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபுகுஷிமா உள்ளிட்ட மாநிலங்களில் பின்னதிர்வுகள் வரலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ஒரு மீட்டர் உயரத்துக்கு சுனாமி வரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்