ரஷ்யா மீது பொருளாதார தடை: ஜப்பான் அதிரடி அறிவிப்பு!

புதன், 23 பிப்ரவரி 2022 (17:53 IST)
உக்ரைன் நாட்டின் மீது படை எடுக்க தயாராக இருக்கும் ரஷ்யா மீது ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஒரு சில மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் தற்போது ஜப்பான் நாடும் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 
உக்ரைனில் செயல்பட்டு வரும் ரஷ்ய ஆதரவுப் படைகளுக்கு உதவியாக ரஷ்ய படைகளை அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் இதனையடுத்து ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதிப்பதாகவும் ஜப்பான் தெரிவித்துள்ளது
 
இந்த தகவலை ஜப்பான் பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
ரஷ்யாவின் இந்த செயல் உக்ரைன் நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச விதிகளை மீறும் செயல் என்றும் பிரதமர் தெரிவித்தார் மேலும் சில நாடுகள் பொருளாதார தடை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்