உலகம் முழுவதும் மனித உடலும், மீன் போன்ற வாலும் கொண்ட கடற்கன்னிகள் குறித்த கதைகள், நம்பிக்கைகள் இருந்து வருகின்றன. என்றாலும் இதுவரை அப்படியான உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பதற்கான சான்றுகள் அவ்வளவாக கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் ஜப்பானின் பசிபிக் தீவில் உள்ள சிகோகு என்ற தீவில் வித்தியாசமான ஒரு மம்மியை ஜப்பானியர்கள் கண்டுபிடித்துள்ளனர். அங்குள்ள புராதானமான கோவிலில் இந்த மம்மி இருந்துள்ளது. 12 இன்ச் மட்டுமே உள்ள இந்த மம்மியின் உடலின் மேல்பாகம் மனிதர்களை போல கைகள், முகம், கண், வாய் கொண்டதாக உள்ளது. கீழ்பாகம் மீன்களை போல வால் கொண்டதாக உள்ளது.