ஜெயலலிதா வீட்டில் எவ்வளவு தங்கம், எத்தனை மின் சாதனங்கள் மற்றும் புத்தகங்கள் இருந்தன? - விரிவான தகவல்

Webdunia
புதன், 29 ஜூலை 2020 (15:21 IST)
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் 4 கிலோ தங்கமும் 601 கிலோ வெள்ளியும் 8376 புத்தகங்களும் இருந்ததாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள வேதா நிலையம் என்ற இல்லத்தில் வசித்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சாதனைகளை நினைவுகூரும் வகையில் அந்த வீட்டை அரசுடமையாக்கி, நினைவில்லமாக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

இதற்கான அரசிதழ் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழ் அறிவிப்பில் ஜெயலலிதாவின் இல்லத்தைக் கையகப்படுத்தியபோது என்னென்ன பொருட்கள் இருந்தன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜெயலலிதாவின் இல்லத்தில் தங்கப் பொருட்கள் 14 இருந்ததாகவும் அவற்றின் மொத்த எடை 4 கிலோ 372 கிராம் என்றும் வெள்ளிப் பொருட்கள் 867 இருந்ததாகவும் அவற்றின் எடை 601 கிலோ 424 கிராம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இவை தவிர, 11 டிவிக்கள், 10 ஃப்ரிட்ஜ்கள், 38 குளிர்சாதனக் கருவிகள், 556 ஃபர்னிச்சர்கள், 6514 சமையலறைப் பொருட்கள், 15 பூஜை பொருட்கள், 10,438 துணிகள், 29 தொலைபேசிகள், மொபைல் போன்கள், 8376 புத்தகங்கள், 653 ஆவணங்கள், 6 கடிகாரங்கள் ஆகியவையும் அவரது இல்லத்தில் இருந்ததாக தமிழக அரசின் அரசிதழ் தெரிவிக்கிறது.

இந்த இல்லத்திற்கான இழப்பீட்டுத் தொகை ஏற்கனவே தமிழக அரசால் நகர சிவில் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்