இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம்; அரசுக்கு எதிராக தீபா ஆவேசம்!

சனி, 25 ஜூலை 2020 (14:54 IST)
வேதா இல்லம் அரசுடமையானது என்பதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர் தீபா மற்றும் தீபக். 
 
இறக்கும் முன் ஜெயலலிதா யாருக்கும் உயில் எழுதி வைக்கவில்லை.  இதனால் இவற்றை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற வேண்டும் என அரசு விரும்பியது.  
 
இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் வழக்கு தொடர, உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தை நினைவில்லமாக எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டது.   
 
எனவே, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.36 கோடி மற்றும் வாரிசுகளான தீபக் மற்றும் தீபாவிற்கு நிவாரணமாக ரூ.32 கோடி என மொத்தம் ரூ.68 கோடியை ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு விலைக்கு வாங்க ஏதுவாக நீதிமன்றத்தில் டெபாசிட் செய்துள்ளது.   
 
இதனைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் அரசுடமையானது என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர் தீபா மற்றும் தீபக். 
 
தீபா இது குறித்து கூறியதாவது, இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம். வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விடமாட்டேன். சட்ட ரீதியாக மீட்டெடுப்பேன். வேதா இல்லத்தை விட்டுத் தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அவர் மரணம் எதிர்பாராதது, இல்லையென்றால் உயில் எழுதி வைத்திருப்பார் என்றும் தீபா கூறி உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்