வாதம் விவாதம்: இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்து விட்டதா?

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (15:29 IST)
இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருந்தார்.
இந்திய பெருநகரங்களில் மின் தட்டுப்பாடு நிலவும் நிலையில் பிரதமர் நரேந்திர மோதியின் இந்த கூற்று சரியா? என வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம்.
 
இதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் அளித்த கருத்துக்களை இங்கே தொகுத்தளிக்கிறோம்.
 
''காங்கிரசின் 97% மின் இணைப்பிற்குபின் மீதமுள்ளதை முடித்த பெருமை மோடிக்கு சேரும். இதற்காக மோடி விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டாம். காங்கிரசின் பலமான அஸ்திவாரத்தின் மீது மோடி பெயின்ட் பூசிக்கொண்டிருக்கிறார்'' என பேஸ்புக்கில் எழுதியுள்ளார் சேகர் பர்னாபஸ்.
 
''இந்தியாவுக்கு இது பொருந்தும். ஆனால் தமிழகம் 1980களில் அனைத்து கிராமமும் மின் இணைப்புப் பெற்ற மாநிலமாக மாறிவிட்டது'' என எழில்வனன் அருணாச்சலம் தெரிவிக்கிறார்.
''சில கிராமங்களில் மின்சாரமே இல்லாமல் இருப்பதை விட, அனைத்து இடங்களுக்கும், மின் தடையுடன் மின்சார வசதி இருப்பது சிறப்பு'' என ட்விட்டரில் விஜய் என்ற நேயர் கூறியுள்ளார்.
 
ஜெயராமன் தன்னுடைய ட்வீட்டில் ''இந்தியாவிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தது பாராட்டதக்கது என எழுதியுள்ளார்.
''காங்கிரஸ் போட்ட ரோட்டில் தான் இன்னும் பயணம் செய்கிறார், சொந்த சரக்கு ஒன்றும் இல்லை, எல்லா திட்டத்துக்கும் பெயர் மாற்றம் மட்டும் செஞ்சிட்டார். மின்சாரம் இல்லா மலை கிராமங்கள் இன்னும் உண்டு'' என குறிப்பிட்டுள்ளார் ஃபரூக் பாஷா.
''பெரும்பாலான வடமாநிலங்கள் இன்னும் வளர்ச்சி அடையவே இல்லை. மின்சார கட்டமைப்புகள் இருந்தாலும் மின்சாரம் இருக்காது'' என சதீஷ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
''இந்தியாவில் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்தது உண்மையே ஆனால் மின் பயன்பாடு அதிகம் காரணமாக தட்டுப்பாடு ஏற்படுவது சகஜமே'' என எழுதியுள்ளார் அருணாச்சலம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்