இந்த நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் 12வது ஐபிஎல் தொடர் போட்டிகளை மார்ச் 29, முதல் மே 19, வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அப்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் வேறு நாட்டில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியபோது, நாங்கள் எந்தவொரு சூழலுக்கும் தயாராக உள்ளோம். தேர்தல் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டால், போட்டிகள் துபாய்க்கு மாற்றப்படும். துபாயின் நேரம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்றதாக இருக்கும். எனவே துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மைதானங்களில் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்