செயற்கை நுண்ணறிவில் நியாய தர்மங்களை கடைபிடிக்க முனையும் கூகுள்.

Webdunia
புதன், 27 மார்ச் 2019 (16:31 IST)
செயற்கை நுண்ணறிவு, தானியங்கி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களில் நியாய தர்மங்களை பின்பற்றும் நோக்கில், விழுமியங்களுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது.
வளரும் தொழில்நுட்பங்களை கூகுள் பயன்படுத்தும் திட்டங்கள் குறித்து கடந்த காலங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன.
 
ஆளில்லா உளவு விமானங்களை இயக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க அமெரிக்க பாதுகாப்பு துறை உடனான ஒப்பந்தத்தை கூகுள் புதுப்பிக்கப்போவதில்லை என 2018இல் கூகுள் அறிவித்திருந்தது.
 
'ரோபோக்கள் அடிமையாக மட்டுமே இருக்க வேண்டும்,' எனும் ஆய்வறிக்கை ஒன்றை தயாரித்த பிரிட்டனில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோனா பிரிசன், அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத் துறை துணைச் செயலர் வில்லியம் ஜோசப் பர்ன்ஸ் உள்ளிட்ட எட்டுப் பேர் கூகுள் அமைத்துள்ள இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்