புதுப் புரட்சியை ஏற்படுத்த களமிறங்கியிருக்கும் Follow ads நிறுவனம்!!!

திங்கள், 18 மார்ச் 2019 (17:24 IST)
Follow ads எனும் புதிய மொபைல் அப்ளிக்கேஷன் அறிமுகமாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
 
சாதார மக்களை சிறு குறு வியாபாரிகள் மற்றும் சிறு குறு தொழில் முனைவோர்களுடன் இணைக்க Follow ads ஒரு புது தொடக்கத்தை துவங்கியுள்ளது. மக்களின் தேவைகளை உணர்ந்து அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கு அருகேயுள்ள வியாபாரிகளை அணுக செய்கிறது.
 
உதாரணத்திற்கு ஒருவர் நாட்டுக்கோழி வாங்க நினைக்கிறார். ஆனால் அவருக்கு நாட்டுக்கோழி எங்கே வாங்குவது என தெரியாது. அவர் அருகிலேயே ஒரு வியாபாரி நாட்டுக்கோழி வைத்திருப்பார். இவ்விவரம் அந்த நபருக்கு தெரியாது. ஆனால் Follow ads மொபைல் ஆப் மூலம், சம்மந்தப்பட்ட நபர் அருகிலே இருக்கும் நாட்டுக்கோழி வியாபாரியிடம்  நேரடியாக அணுகி நாட்டுக்கோழியை வாங்கலாம். இதேபோல் நாம் நமக்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கலாம்.
இந்த ஆப் ஆயிரக்கணக்கான சில்லரை வியாரிகளையும் சிறுகுறு வியாபாரிகளையும் மக்களை நேரிடையாக தொடர்பு படுத்த ஒரு பாலமாக அமைகிறது. இதில் உள்ள பொருட்களுக்கு ஏராளமான ஆஃபர்களும் இருக்கிறது.  இதுபோக இதில் இளைஞர்கள் வேலையும் தேடலாம்.
 
சமீபத்தில் சென்னையில் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. Follow adsன் நிறுவனர் முகமது ரில்வான் கான் மற்றும் ஹச்னுல் இஷ்ரத் இந்த கம்பெனியை துவங்கியுள்ளனர். 
 
இந்த செயலியை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிமுகம் செய்தார். அவருடன் கரு பழனியப்பன், மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, சாம் பால் ஆகியோர்  பங்குபெற்றனர். டிஜிட்டல் டெக்னாலஜியில் ஒரு புதுப் புரட்சியை ஏற்படுத்த இந்நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்