கொரோனா வைரஸ்: ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சந்தித்து வரும் சவால்கள் என்ன?

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (14:22 IST)
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொழில்முனைவோர், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், உடல் மற்றும் மனரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருவதாக கர்ப்பிணிகள் தெரிவிக்கின்றனர்.

கொரொனோ நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மருத்துவ சிகிச்சை பெறுவது, ஆரோக்கியமான உணவுகளை வாங்குவது மற்றும் போக்குவரத்து ஆகியவை பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கிறார்.

கோவையைச் சேர்ந்த வானொலி அறிவிப்பாளர் பதூல். இவர் தற்போது கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதத்தில் உள்ளார். "கொரோனா அச்சத்தால் வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கே பயமாக உள்ளது. பரிசோதனை மற்றும் ஆலோசனைக்காக மருத்துவமனைக்கு செல்வதை கூட தவிர்த்து வருகிறேன். பிரசவ காலத்தில் புரதம் மற்றும் இரும்புச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடச் சொல்கின்றனர். ஆனால், அவற்றை வாங்குவதே சவாலாக உள்ளது.

சந்தையில் நமக்கு தேவையான காய்கறிகளை வாங்க முடிவதில்லை. மீன் மற்றும் இறைச்சிகள் கிடைப்பது மிகவும் அரிதாகியுள்ளது. அப்படியே, கிடைத்தாலும் அதன் விலை பல மடங்காக அதிகரித்து விற்கப்படுகிறது. வேறு வழியில்லாமல் கிடைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது" என்கிறார் பதூல்.

நகரங்களில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களை விட கிராமங்களில் வசிப்பவர்கள் அதிக சவால்களை சந்திப்பதாக தெரிவிக்கிறார் இவர். "திடீரென்று, வயிற்றில் இருக்கும் குழந்தையின் அசைவுகள் தென்படாது. எனக்குள் அறியாத ஒரு பயமும் படபடப்பும் தொற்றிக்கொள்ளும். மாதிரியான சூழலில் மருத்துவரை நேரில் அணுகி ஆலோசனை பெற தற்போது சிரமங்கள் இருப்பதால், தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்கிறேன்.

"கோவை போன்ற நகரங்களில் வாழும் நடுத்தர மக்களால் தொலைப்பேசி அல்லது வீடியோ காலிங் மூலமாக மருத்துவரிடம் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கு அந்த வசதிகளும் கிடையாது. கிராமங்களில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், அரசு மருத்துவமனையை மட்டுமே அவர்கள் நம்பியுள்ளனர்" என்கிறார் பதூல். குடும்பத்தினரோடு அவசியமாக இருக்க வேண்டிய சூழல் இருந்தும், ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிநாடுகளில் பல இந்தியர்கள் தவித்து வருவதாக கூறுகிறார் இவர்.

"சேலம் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், நகரங்களில் கொரோனா நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது. நடைப்பயிற்சி செல்வதற்கு கூட வெளியே செல்லமுடியாத சூழல் உள்ளது. வீட்டுக்குள் அல்லது மொட்டை மாடியில் தான் நடைப்பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. எனவே, ஐந்து மாத கர்ப்பத்தோடு எனது கிராமத்திற்கே வந்து தங்கிவிட்டேன்." என்கிறார் ப்ரீத்தி.

மேலும், "நகரத்தில் இருந்த பயம் கிராமத்தில் இல்லை. மக்கள் நெருக்கமாகவோ அதிகமாகவோ கூடுவதில்லை. வீட்டைச் சுற்றியுள்ள மரங்களின் நிழலில் நடைபயிற்சி செய்ய முடிகிறது. ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள்,சமையலுக்கான காய்கறி மற்றும் பழங்கள் இங்கு எளிதாக கிடைக்கிறது. ஆனால், அவசர மருத்துவ உதவிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. வீட்டிலிருந்து, அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், மருந்தகம் அல்லது மருத்துவமனைக்கு செல்வதற்கான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஸ்கேன் செய்வதற்கான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் பரிசோதனை மற்றும் ஆலோசனைக்காக மருத்துவர்கள் முன்பைப்போல் அதிகநேரம் கொடுப்பதில்லை" என்கிறார் இவர்.

ஊரடங்கு காலங்களில் கர்ப்பிணிப் பெண்கள் செய்ய வேண்டியவை குறித்து விளக்குகிறார் கோவையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் கலா மகேஸ்வரன், "ஊரடங்கு அமலில் இருக்கும்போது வீட்டை விட்டு வெளியில் வருவதையே அனைவரும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, புதிதாக திருமணம் செய்தவர்கள் பலர் மாதவிடாய் தள்ளிப்போனதும் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர். "பெண்கள் பிரசவ காலத்தில் தனது சொந்தங்கள் அனைத்தும் அருகில் இருக்க வேண்டும் என கருதுவர்.

குறிப்பாக, கணவரின் அரவணைப்பு அதிகமாக தேவைப்படும். எனது கணவர் கப்பலில் பணிபுரிந்து வருகிறார். தற்போது, அவர் பணிபுரியும் கப்பல் மொரீசியசில் உள்ளது. எனது பிரசவத்தின்போது இங்கு வந்துவிடுவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், உலக அளவில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக அவரால் இன்னும் வரமுடியவில்லை. இதுவே, ஒரு மிகப்பெரிய மனஅழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்று, ஊரடங்கு உத்தரவால் மனதளவிலும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர்." என தெரிவிக்கிறார் பதூல்.

கொரோனாவின் தாக்கம் கிராமங்களில் குறைவாக இருப்பதாக நம்பும் ப்ரீத்தி, சேலத்திலிருந்து தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஜமீன்கூடலூர் கிராமத்திற்கு வந்து தங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்