கொரோனா: பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடக் குறையும் – ஆர்பிஐ

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (15:33 IST)
நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்ததைவிட ஒரு சதவிகிதம் குறையும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், வழக்கமான பருவமழை மூலம் பொருளாதாரம் மீட்சிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி 10.5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது 9.5 சதவிகிதமாக குறையும் என சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே குறைவாக இருக்கும் வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

ரெப்போ விகிதம் 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ரெப்போ விகிதத்தை 115 புள்ளிகள் குறைத்து ஆர்பிஐ நடவடிக்கை எடுத்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்