தினகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா? பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (05:58 IST)
இரட்டை இலை சின்னத்தை குறுக்கு வழியில் பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயற்சித்த டிடிவி தினகரனை நேற்று நள்ளிரவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் டிடிவி தினகரனை ஜாமீனில் விடுவிக்க கோரி மனுத் தாக்கல் செய்யப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் சார்தக் நாயக் தெரிவித்துள்ளார்.


 


தினகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் , டிடிவி தினகரன் கடந்த 22-ம் தேதியன்று டெல்லி குற்றப்பிரிவு போலீசார் நேரில் ஆஜரானார். கடந்த 4 நாட்களாக அவரிடம் பல மணி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த நான்கு நாட்களில் மட்டும் அவரிடம் சுமார் 37 மணி நேரம் டெல்லி போலீசார் நடத்தினர். விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, இன்று பிற்பகல் 2 மணியளவில், டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இந்நிலையில், தினகரனை ஜாமீனில் விடுவிக்க கோரி, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படும் என அவரது தரப்பு வழக்கறிஞர் சார்தக் நாயக் தெரிவித்திருந்தாலும் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
அடுத்த கட்டுரையில்