நான் நினைத்தால்..? - அமைச்சர்களை மிரட்டும் தினகரன்

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (15:27 IST)
தனக்கு எதிராக பேசும் அதிமுக அமைச்சர்களின் பதவிகளை நீக்கும் அதிகாரம் தனக்கு உள்ளதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது தினகரன் கூறியதாவது:
 
சிறையில் இருப்பதால், கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தற்போது செயல்பட முடியாமல் இருக்கிறார். எனவே, அவருக்கு அடுத்து துணைப் பொதுச்செயலாளர் என்கிற முறையில் எனக்கே எல்லா அதிகாரங்களும் இருக்கிறது. என்னை கட்சியில் இருந்து விலக்கி வைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை. சில அமைச்சர்கள் அப்படி பேசி வருகிறார்கள். இது அவர்களின் அறியாமை. அவர்களை நீக்கும் அதிகாரம் எனக்கு இருக்கிறது. இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்லும் காலம் நிச்சயம் வரும். அன்று கண்டிப்பாக அங்கு செல்வேன். இன்னும் 60 நாட்கள் கழித்து அரசியல் பணிகளில் தீவிரம் காட்டுவேன். என் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்கையும் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என அவர் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்