ரஜினியை என் கட்சியில் சேர்த்து கொள்ள தயார்: கமல்ஹாசன்

Webdunia
வெள்ளி, 15 செப்டம்பர் 2017 (22:59 IST)
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருமே அரசியலுக்கு வருவதற்கு தயார் நிலையில் உள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கோடிட்டு காட்டினார். அதுமட்டுமின்றி பல அரசியல் தலைவர்களுடன் கலந்தாலோசித்து தனிக்கட்சி குறித்தும் ஆலோசனை செய்தார்.



 
 
இந்த நிலையில் திடீரென களத்தில் இறங்கிய கமல்ஹாசன் தனது கருத்துக்கு கிடைத்த அமோக ஆதரவு காரணமாக ரஜினியை விட வேகமாக அரசியல் செய்ய தொடங்கிவிட்டார். அனேகமாக அவர் இன்னும் ஓரிரு நாட்களில் தனது அரசியல் கட்சியை உறுதி செய்வார் என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல்ஹாசன், ' ரஜினி விரும்பினால் தனது அணியில் இணைத்துக் கொள்ளவும் தயாராக இருப்பதாக கூறினார். மேலும் மாற்றம் தேவை என்பதற்காக அரசியலுக்கு வருவதாகவும், எனது வாரிசுகளுக்காக நான் அரசியலுக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார்
 
 
அறவழியில் போராடுவதே ஆரம்பம், அகிம்சையின் உச்சகட்ட போராட்டம் என்றும் நான் தொழிலுக்காக நடிக்கிறேன் ஆனால் சிலர் பதவிக்காக நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
அடுத்த கட்டுரையில்