டிடிவி தினகரனுடன் முதல்வர் மைத்துனர் ரகசிய சந்திப்பு? சமாதான பேச்சுவார்த்தையா?

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2017 (23:27 IST)
திகார் சிறையில் இருந்து திரும்பி வந்த தினகரனின் முதல் வேலையாக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியையும் அமைச்சர் பதவியில் இருந்து ஜெயகுமாரையும் இறக்கும் முடிவோடு களமிறங்கினார். அவரது முயற்சியின் பயனாக 30 எம்.எல்.ஏக்கள் தினகரன் அணிக்கு மாற, அதிர்ச்சி அடைந்தார் எடப்பாடி பழனிச்சாமி





இந்த நிலையில் இப்போதைக்கு தினகரனுடன் சமாதானமாக செல்வதே சரி என்று முடிவெடுத்த முதல்வர் தரப்பு, தினகரனிடம் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கோவையில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் முதல்வரின் மைத்துனர் தினகரனை சந்தித்து பேசவுள்ளதாகவும், இந்த பேச்சுவார்த்தையின்போது இருதரப்பு கருத்துவேறுபாடுகளும் களையப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்