விஸ்வரூபம் எடுக்கவுள்ள தினகரன்; மாவட்ட நிர்வாகிகளுக்கு திடீர் அழைப்பு; தமிழக அரசியலில் பரபரப்பு

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (12:27 IST)
ஆகஸ்டு 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வருமாறு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.


 

 
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொத்த விவகாரத்தில் சிறைக்கு சென்று திரும்பிய டிடிவி தினகரன் அதிமுகவின் இரு அணிகளும் இணைய 60 நாட்கள் அவகாசம் கொடுப்பதாக தெரிவித்தார். அரசியலில் தீவிரமாக களமிறங்க போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால் இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சு வார்த்தை இதுவரை நடக்கவில்லை. 
 
இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது அதிமுகவில் 3 அணிகள் உள்ளது. ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி மற்றும் தினகரன் அணி. எடப்படி அணியினர் ஏற்கனவே தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
 
அமித்ஷா அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் முகாமிடுகிறார். அப்போது ஓபிஎஸ் அணி பாஜகவில் இணையபோவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த காரணத்தினால் கூட தினகரனின் அழைப்பு இருக்கலாம். இல்லை தினகரன் மீண்டும் அதிமுக கட்சியின் தலைமை ஏற்க முயற்சிக்கிறாரா? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
 
இந்த இரண்டு காரணங்களும் கூறப்பட்டு வரும் நிலையில் தினகரனின் இந்த திடீர் அழைப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்