ஒரே கூட்டணியில் அதிமுக-திமுக ஆதரவு: தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (07:25 IST)
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளதை அடுத்து அரசியல் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் தீவிரமாக உள்ளனர். பாஜக தேர்வு செய்யும் வேட்பாளருக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் அக்கட்சி சுமார் நான்கு வேட்பாளர்களை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரை விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது



 


இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பிக்களின் ஓட்டு இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எலியும் பூனையுமாக தமிழகத்தில் அரசியல் செய்து வரும் இந்த கட்சிகள் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் என்று செய்திகள் கூறுகின்றன.

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் பாஜகவின் கை தமிழக அரசியலின் பின்னணியில் உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரை அதிமுகவின் இரண்டு அணிகளும் ஆதரிக்கும் என்று அரசியல் பிரபலம் ஒருவரும், முத்த பத்திரிகையாளர் ஒருவரும் கூறியுள்ளனர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் அக்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்பதால் திமுக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதிமுக தனது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்