டிடிவி தினகரனுக்கு சரத்குமார் திடீர் ஆதரவு: பெட்டி கைமாறியதா?

Webdunia
வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (06:44 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சரத்குமார் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்ற கேள்வி எழுந்தது. இந்த தொகுதியில் நாடார் வாக்குகள் அதிகளவில் இருப்பதால் சரத்குமார் ஆதரிக்கும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் டிடிவி தினகரனுக்கே தனது ஆதரவு என்று கூறியுள்ளார்.





வேண்டுமென்ற சமக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படும் அளவுக்கு தவறுகளுடன் வேட்புமனுவை தாக்கல் செய்து சரத்குமார் நாடகம் ஆடியதாகவும், டிடிவி தினகரனிடம் பெரிய தொகை ஒன்றை அவர் வாங்கிவிட்டு அவருக்கு தற்போது ஆதரவு அளித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

இந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு தான் ஏன் ஆதரவு கொடுத்தேன் என்பதை நேற்று சென்னையில் சரத்குமார் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தார்.  2 பேர் பிரிந்துவிட்டால் நடுவில் புகுந்துவிடலாம் என்று நினைக்கிறவர்கள் கனவை உடைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் தொடங்கிய இயக்கம், ஜெயலலிதா வழிநடத்திய இயக்கம் சிறப்பாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால்தான் மக்களை சிறப்பாக வழிநடத்த முடியும். ஆகவே, நாங்கள் ஆதரவு தெரிவித்துள்ளோம். 7-ம் தேதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். டி.டி.வி.தினகரன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்' என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்