ஸ்டாலின் முதல்வராகும் நேரம் வந்துவிட்டது என்று நேரம் வந்தால் நாங்கள் திமுகவிற்கு வந்துவிடுவோம் என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், நடிகருமான ராதாரவி கூறியுள்ளார்.
திரைப்பட நடிகரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான வாகை சந்திரசேகரின் மகள் சிவநந்தினியின் திருமணம் திமுக செயல் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. நடிகர் ராதாரவி பேசுகையில், ”எனது சித்தப்பாவாக கருதும் திமுக தலைவர் கலைஞரை விரைவில் உடல் நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன்
இங்கு பேசியவர்கள் அனைவரும் ஸ்டாலினை முதல்வராக வரவேண்டும் என்றார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. அதற்கான தகுதியும் ஸ்டாலினிடம் உள்ளது.
இப்போது நல்ல எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றுகிறார். சிலர் இங்க எப்ப வருவீங்க, வருவீங்க என கேட்கின்றனர். அதற்கான நேரம் வந்தால் வந்துவிடுவோம்” என்று கூறியுள்ளார்.
விழாவில் நடிகர் பிரபு, சிவக்குமார், ராதாரவி, நெப்போலியன், தியாகு, தமிழச்சி தங்கபாண்டியன், திமுகவைச் சேர்ந்த இன்னாள் முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.