இலவசங்கள் தேவை, ஆனால்…? –எந்த எழுவர் சர்ச்சைக் குறித்து ரஜினி விளக்கம்

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:08 IST)
ரஜினிகாந்த் நேற்று கூறிய எந்த எழுவர் என்ற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் அவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அந்த சர்ச்சைக் குறித்து ரஜினிகாந்த் இன்று தனது இல்லத்தில் விளக்கமளித்தார். அதில் ’அந்த நிருபர் தன்னுடைய கேள்வியை தெளிவாகக் கேட்கவில்லை. அவர் ராஜீவ் கொலையாளிகள் 7 பேர் அல்லது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் என்று விளக்கமாக கேட்டிருந்தால் நான் தெளிவாகப் பதிலளித்து இருப்பேன்.

’பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் பற்றி எனக்கு தெரியாது என்ற மாயையை சிலர் உருவாக்கி வருகின்றனர்; கேள்வியை தெளிவாக கேட்டிருந்தால் தெளிவாக பதிலளித்திருப்பேன். 7 பேர் விவகாரம் குறித்து ஒன்றுமே தெரியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் 7 பேரும் விடுதலை ஆக வேண்டும் என்பதுதான் எனது கருத்தும். பேரறிவாளன் பரோலில் வந்தபோது அவரிடம் தொலைபேசியில் பேசினேன்’ என விளக்கமளித்துள்ளார்.

மேலும் சமீபகாலமாக எழுந்துள்ள இலவசங்கள் குறித்த சர்ச்சைக்குப் பதிலளித்த அவர் ‘இலவசங்கள் 100 சதவீதம் தேவை ஆனால் அவை ஓட்டுக்காக இருக்கக்கூடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்