அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை என அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியிருப்பதற்கு, ஓ.பி.எஸ் அணியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை “சசிகலாவை நிக்கும் அதிகாரம் யாருக்குமில்லை” எனக் கூறியிருந்தார். இதுபற்றி கருத்து தெரிவித்த ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அவைத்தலைவர் மதுசூதனன் “தம்பிதுரையின் அதிர்ஷடம் அவர் அதிமுகவில் இணைந்து துணை சபாநாயகர் ஆகிவிட்டார். அவர் அதிமுகவின் உறுப்பினரே இல்லை. எனவே, அவரை பற்றி பேச எதுவுமில்லை” எனக் கூறினார்.
அதேபோல், மைத்ரேயன் எம்.பி. கூறும்போது “தெருவில் செல்பவர்களுக்கு எல்லாம் நான் கருத்து கூற முடியாது. யாரை பற்றி பேசவும் தம்பிதுரைக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவரின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என கூறினார்.