அப்போ இருந்த இந்தியா இப்போ இல்ல: சீனாவிற்கு அருண் ஜெட்லி பதிலடி!!

Webdunia
சனி, 1 ஜூலை 2017 (11:30 IST)
பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.


 
 
எல்லை வரையறை செய்யப்படாத பகுதியில் சீன ராணுவம் தற்போது அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. பூடானின் டோக்லம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் நோக்கில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது சீன அரசு. 
 
டோக்லம் பீடபூமியை சீனா ஆக்கிரமிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இந்தியா இந்த முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளது.
 
இந்நிலையில், இந்தியாதான் எல்லையில் அத்துமீறுவதாகவும், 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய-சீன போரை நினைவில்கொள்ளுமாறு சீனா கூறியது.
 
இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 1962 ஆம் ஆண்டில் இருந்த நிலை வேறு, 2017-ல் இருக்கும் நிலைவேறு. இந்தியா 1962 ஆம் ஆண்டு இருந்தது போல இப்போது இல்லை என கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்