செப். 12 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்!!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (19:55 IST)
தமிழக அரசியல் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு மற்றும் செயல்குழு நடைபெறவுள்ளது.


 
 
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அணிகள் இணைபிற்கு பின்னர், இரு அணிகளும் இணைந்து பங்கேற்க்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் இதுவாகும்.
 
இந்த அறிவிப்பை அதிமுக அம்மா, புரட்சித் தலைவி அம்மா அணிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதிமுக பொதுக்குழுவில் 2,780 உறுப்பினர்களும், செயற்குழுவில் 250 உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்