கமல்ஹாசன் விவகாரத்தில் தினகரன் கூறியது என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (06:31 IST)
தமிழக அமைச்சர்கள் மீது கமல் சொன்ன குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் கண்ணியமாக பதில் சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு இந்த பிரச்சனை சீரியஸ் ஆகியிருக்காது. ஒருமையில் அநாகரீகமாக பதில் கூறியதால் கமல் சீறிவிட்டார் என்று தினகரன் வெளிப்படையாகவே குற்றம் சுமத்தியுள்ளதால் அதிமுகவினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.



 
 
நம்முடைய அரசாங்கம் ஊழல் அரசாங்கம் என்கிறார் கமல். அவருக்குப் பதில் சொல்லாமல், தினகரன் நமக்கு அட்வைஸ் செய்கிறார்’ என்று அமைச்சர்கள் கொந்தளித்தார்களாம். அதற்கு தினகரன், 'யாருமே அரசாங்கத்தைப் பற்றி விமர்சனம் பண்ணக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும்? அதற்கு அமைச்சர்கள் கண்ணியமாக பதில் சொல்வதற்குப் பதிலாக, ஒருமையிலா பதில் சொல்வது?’ என்று காய்ச்சி எடுத்தாராம். குறிப்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய மூவர்தான் கமல் பிரச்சனை பெரிதாக காரணம் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளாராம்.
 
இதற்கு பின்னர்தான் அமைச்சர்கள் தற்போது கமலை மரியாதையுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல கோஷ்டிகளாக அதிமுக இருக்கும் நிலையில் கமல்ஹாசனையும் சீண்டி இன்னொரு எதிரியை உருவாக்கி கொள்ள வேண்டாம் என்பதுதான் தற்போது முதல்வரின் எண்ணமாகவும் உள்ளதாம்
அடுத்த கட்டுரையில்