பொதுவாக, வேலைக்கு செல்பவர்கள் இருசக்கர வாகனம், பஸ், கார், ரயில் உள்ளிட்டவற்றில் செல்வார்கள். ஆனால், மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் தினமும் 700 கிலோமீட்டர் விமானத்தில் பயணம் செய்து வேலை பார்த்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் உள்ள ஏர் ஆசியா நிறுவனத்தின் உதவி மேலாளராக பணிபுரியும் ரேச்சல் கவுர் என்பவர், அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, 5 மணிக்கு விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து காலை 6:30 மணிக்கு கோலாலம்பூருக்கு விமான மூலம் புறப்பட்டு, 7:45 மணிக்கு அலுவலகம் சென்று பணியில் ஈடுபடுகிறார்.
வேலை முடிந்தவுடன், இரவு 8 மணிக்கு மீண்டும் வீடு திரும்புகிறார். தினமும், அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்திலிருந்து வீட்டிற்கும் 700 கிலோமீட்டர் விமானத்தில் பயணம் செய்து பணியை செய்கிறார்.
"வீட்டில் இருந்து பணிபுரிவதை விட, அலுவலகத்திற்கு சென்று பணிபுரிவதே தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அலுவலக பணிகளில் முழுமையாக ஈடுபட முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு மாதம் 35 லட்சம் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், அவரது விமான செலவை விட, அவரது வீட்டு வாடகையே அதிகம் எனவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.