பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு..!

Siva

ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (11:29 IST)
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் முன் வைத்த நிலையில், இது குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, பிப்ரவரி 11ஆம் தேதி முதல் போராட்டம் நடத்துவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 ஆண்டுகளாக பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அந்த கோரிக்கைகளை முன்னுரிமை கொடுத்து தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து, டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி இருப்பதாக கூறி, கோரிக்கைகளை பிப்ரவரி 11ஆம் தேதிக்குள் பரிசீலிக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, டாஸ்மாக் ஊழியர்கள் பிப்ரவரி 11ஆம் தேதி முதல், டாஸ்மாக் நிர்வாக அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுமா? மது விற்பனை செய்யப்படுவது நிறுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்