RRB Recruitment: SSLC பாஸ் போதும்..! ரயில்வேயில் 32,438 பணியிடங்கள்! - விண்ணப்பிப்பது எப்படி?

Prasanth Karthick

செவ்வாய், 11 பிப்ரவரி 2025 (09:41 IST)

RRB Recruitment: இந்திய ரயில்வேயில் ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலமாக 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

RRB Group D-ன் படி போக்குவரத்து, பொறியியல், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் உள்ளிட்ட துறைகளில் பாயிண்ட்மேன், ட்ராக் மெஷின் உதவியாளர், ட்ராக் மெயிண்டெயினர், ப்ரிட்ஜ் உதவியாளர், மெக்கானிக்கல் உதவியாளர், லோகோ ஷெட்- டீசல் உதவியாளர், ஒர்க்‌ஷாப் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான நிரப்புதல் நடைபெற உள்ளது.

 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர் வயது ஜூலை 1, 2025ன் படி 18 முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். 

 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பொது பிரிவினர், ஓபிசி பிரிவினர் ரூ.500, எஸ்சி, எஸ்டி, இபிசி, திருநங்கைகள் ஆகியோர் ரூ.250 செலுத்த வேண்டும். கணினி அடிப்படையிலான தேர்வின்போது பொது, ஓபிசி பிரிவினருக்கு ரூ.100 மற்ற பிரிவினருக்கு முழுத் தொகையும் திரும்ப கிடைக்கும்.

 

இந்த தேர்வானது கணினி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை, ஆவண சரிபார்ப்பு ஆகிய படிநிலைகளை கொண்டது.

 

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 24 கடைசி தேதியாகும்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்