மாடியில் இருந்து பணத்தைக் கொட்டிய இளைஞன் : இளம் கோடீஸ்வரனின் அட்டகாசம்

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (14:01 IST)
ஹாங்காங்கில் வசித்து வரும் வாங்சிங் (24)  மிக இளம் வயதில் பல கோடிகளில் புரள்பவர் என்று கூறப்படுகிறது.இணையதளத்தில் வீடியோக்களுக்கு பஞ்சம் இல்லையென்றாலும் கூட பணத்தை நீர் போன்று  மாடியில் இருந்து  வாரி இறைத்துள்ள வாங் கிட்டின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பாரம்பரிய கோடீஸ்வரர்களே அவ்வளவு எளிதில் பணத்தை வாரி இறைக்க மாட்டார்கள்.ஆனால் வாங் கிட் ,கிரிப்டோகரன்சி மூலம் தான் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை மக்கள் மீது இறைத்துள்ளார்.
 
வாங்கிட், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பல கோடிகளை லாபமாக சம்பாதித்துள்ளார்.எனவே இவரது வங்கிக் கணக்கில் பல கோடிகள் இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.இந்நிலையில் தான் சம்பாதித்த பணத்தை படத்தில் வரும் ராபின் ஹூட் போல மக்களுக்கு நல்லது செய்ய விரும்பி ரூ.18 லட்சம் மதிப்பிலான பணத்தை மாடியிலிருந்து கொட்டினதாக வாங் கூறியுள்ளார்.
 
வாங் பணத்தைக் கொட்டிய சில நிமிடங்களிலேயே பொதுஅமைதிக்கு பங்கம் விளைத்ததாக இவரை போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் கிரிப்டோ கரன்சியில் பல கோடி அளவுக்கு மோசடி செய்ததாகவும் வாங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
எது எப்படியோ வாங் கொட்டிய பணத்தைக் கையில் எடுத்தவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்