தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ்ந்த நாடு செர்பியா. இங்கு ரனிலோவிச் என்ற ஊரில் மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பம் வசித்து வந்தது. இதன் தலைவர் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.
இவர்கள் திட்டம் தீட்டியதில் தவறில்லை. ஆனால் எல்லோருமாக திட்டம் தீட்டிவிட்டு ஒருநாள் காலையில் வயலுக்கு செல்லும் போது மொத்த பணத்தையும் மேஜையின் மீது வைத்து சென்று விட்டார்கள். அதேசமயம் கதவும் தாழிடப்படாமல் இருக்கவே வெளியே மேய்ந்து கொண்டிருந்த அவர்களின் ஆடு வீட்டுக்குள் நுழைந்து மொத்த பணத்தையும் தின்றுள்ளது.